தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
சிவகங்கை: சிவகங்கையில் தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜ், மரியசெல்வி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமராஜ் வரவேற்றார். கூட்டத்தில் பழைய பென்ஷன் திட்டம், ஊக்க ஊதிய உயர்வு, தொகுப்பூதிய காலங்களை பணிவரன்முறை படுத்துதல், பெண் ஆசிரியர்களை பாதிக்கும் அரசாணை 243யை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியைகள் மரியசெல்வி, விஜயராணிக்கு பரிசு வழங்கினர். மாவட்ட பொருளாளர் நவராஜ், மகளிர் அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.