உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிரதமர் பயிர் காப்பீடு திட்ட  விழிப்புணர்வு வாகன துவக்கம் 

பிரதமர் பயிர் காப்பீடு திட்ட  விழிப்புணர்வு வாகன துவக்கம் 

சிவகங்கை: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டவிழிப்புணர்வு வாகன துவக்க விழா நடந்தது பிரதமரின் (2025--2026)ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்வது குறித்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. பயிர் காப்பீடு திட்டத்திற்கு பஜாஜ் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி தேர்வாகியுள்ளது. நடப்பு சம்பா பருவ நெல் 2 பயிருக்கு விதைப்பு காலம் செப்., முதல் அக்., வரை மட்டுமே. நடவு செய்து நெல் பயிருக்கு காப்பீடு செய்வது குறித்து விழிப்புணர்வு வேளாண்மை துறை சார்பில் வாகனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு வாகனம் அனைத்து வட்டார, கிராமங்களுக்கு சென்று விவசாயிகளிடம் அறிவிப்பு செய்யும். காப்பீடு செய்ய ஏக்கருக்கு பிரீமிய தொகை ரூ.496.98 செலுத்த வேண்டும். தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், தேசிய வங்கிகள், அரசு இ சேவை மையங்கள் மூலம் நவ., 15ம் தேதிக்குள் உரிய பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்ய வேண்டும். பதிவின் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், வி.ஏ.ஓ., வழங்கும் அடங்கல் சான்று, ஆதார் எண் இணைத்த வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம், ஆதார் அட்டை நகல் இணைக்கவும். இந்த பதிவினை சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் பொற்கொடி துவக்கி வைத்தார். வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம், கலெக்டர் பி.ஏ., (வேளாண்மை) தனலட்சுமி, உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) காளிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை