உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சின்ன கண்ணனுாரில் உடல் அடக்கம் செய்வதில் சிக்கல்

சின்ன கண்ணனுாரில் உடல் அடக்கம் செய்வதில் சிக்கல்

மானாமதுரை: சின்ன கண்ணனுார் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரை சேர்ந்த வேலு என்பவர் சென்னையில் ஓட்டுனராக பணிபுரிந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊரான சின்ன கண்ணனுார் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். அருந்ததியர் இன மக்களை அடக்கம் செய்யும் மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாத காரணத்தினால் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். கிராம மக்கள் கூறியதாவது: அருந்ததியர் இன மக்களுக்கு சொந்தமான மயானத்திற்கு பாதை இல்லாத காரணத்தினால் வயல்வெளி, கருவேல மர காட்டிற்கு இடையில் உடலை கொண்டு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. தற்போது விவசாய காலம் என்பதால் வயல்களுக்குள்ளும் உடல்களை கொண்டு செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் அருந்ததியர் இன மக்கள் பயன்படுத்தும் மயானத்திற்கு பாதை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை