உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிங்கம்புணரி: காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து சிங்கம்புணரி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில் தலைமை வகித்தார்.மாவட்ட இணைச்செயலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் ராமன், ஆர்.எஸ்.எஸ். மாநில பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பயங்கரவாதிகளை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ