மேலும் செய்திகள்
பாட்டாளி தொழிற்சங்கம் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
16-Apr-2025
காரைக்குடி; அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல அலுவலகம் முன்பு பி.எம்.எஸ்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டியும், சுழல் முறை பேட்ஜை அமல்படுத்த வேண்டியும், தொழிலாளர் மீது ஆன்லைன் புகார்களை நேரடி விசாரணை இல்லாமல் தண்டனை கொடுப்பதை கைவிடுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மண்டல பொதுச் செயலாளர் ரங்கநாதன் தலைமை வகித்தார். மண்டல பொதுச் செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார்.மண்டல பொருளாளர் முத்துலட்சுமணன், மாநில பேரவை பொதுச் செயலாளர் சதீஷ்குமார், பா.ஜ., மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, பொதுச் செயலாளர் நாகராஜன் கலந்து கொண்டனர்.
16-Apr-2025