சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை: விருதுநகரில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை கைது செய்த போலீசை கண்டித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க மாவட்ட துணை தலைவர் பாண்டி தலைமை வகித்தார். மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் லதா, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர்தனபால், சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மாரி, அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உடையண சாமி பங்கேற்றனர். மாவட்ட இணை செயலாளர் சின்னப்பன் நன்றி கூறினார்.