மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்கள் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்
26-Sep-2025
சிவகங்கை: துாய்மை பணியாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ.12,593 வழங்க வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் சி.ஐ.டி.யு., வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். உள்ளாட்சி பிரிவு மாநில துணை தலைவர் வீரையா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சேதுராமன், பொது செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் உமாநாத் ஆகியோர் பேசினர். அனைத்து ஒன்றிய நிர்வாகிகள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். துாய்மை பணியாளர், மேல்நிலை தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் வழங்க வேண்டும். குடிநீர் தொட்டி சுத்தம் செய்ய தலா ரூ.1000 வழங்க வேண்டும். ஊராட்சி தொழிலாளர்களுக்கு பணிபதிவேடு பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
26-Sep-2025