உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் மறியல்

சிவகங்கையில் மறியல்

சிவகங்கை: தேர்தல் வாக்குறுதி படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தை சேர்ந்த 24 பேரை போலீசார் கைது செய்தனர். கலெக்டர் அலுவலக ஆர்ச் முன் நடந்த மறியல் போராட்டத்திற்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். ஓய்வு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். நிர்வாகிகள் வாசுகி, அன்பரசன், பிச்சை, சங்கரசுப்பிரமணியன் பங்கேற்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் நன்றி கூறினார். மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி