உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பராமரிப்பில்லாத புதுவயல் பஸ் ஸ்டாண்ட்

பராமரிப்பில்லாத புதுவயல் பஸ் ஸ்டாண்ட்

காரைக்குடி: புதுவயல் பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பின்றி கிடப்பதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.புதுவயல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். புதுவயலில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு 2001ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.தொடர்ந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு 2003 ஆம் ஆண்டு திறப்பு விழா நடந்தது. புதுவயல் பஸ் ஸ்டாண்டிலிருந்து, காரைக்குடி மதுரை அறந்தாங்கி பட்டுக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன.தவிர சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மித்ராவயல், தச்சகுடி, பெரிய கோட்டை, சாக்கவயல், ஜெயங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் 5 க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் சென்று வருகின்றன.பஸ் ஸ்டாண்டில் நுழைவு வாயில் முற்றிலும் சேதமடைந்து கிடப்பதோடு மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து சாக்கடை தேங்கி நிற்கிறது.பஸ் ஸ்டாண்ட் முழுவதும் பைக் நிறுத்தப்படுவதால் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.மேலும் தாய்மார்கள் பாலுாட்டும் அறையும் பயன்பாடு இன்றி முடிக்கிடக்கிறது. பயணிகள் அமரும் நிழற்குடை பராமரிப்பின்றி உள்ளது. புதுவயல் பஸ் ஸ்டாண்டை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ