உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துாய்மை பணியில் மாணவர்கள் பெற்றோர் குமுறல்

துாய்மை பணியில் மாணவர்கள் பெற்றோர் குமுறல்

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி மாணவர்களை மட்டும் பயன்படுத்தி மெகா துாய்மை பணி நடப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழக அரசு பள்ளிகளில் மூன்று நாட்கள் மெகா துாய்மை பணியை பள்ளி வளாகம், வகுப்பறை , தலைமையாசிரியர் அறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை 100 நாள் திட்ட பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள், 8,9,10 வகுப்பு மாணவ, மாணவியர்களை வைத்து சுத்தம் செய்து அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவ, மாணவியர்களை மட்டும் வைத்து துாய்மை பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர். திருப்புவனம் அருகே மணலுார் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர் மட்டுமே இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைவரையும் ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ளாமல் மாணவ, மாணவியர்களை மட்டும் பயன்படுத்துவதை மாவட்ட கல்வி அலுவலரும் கண்டு கொள்ளவில்லை. அவர்களது வாட்ஸ் ஆப் குழுவில் மாணவ, மாணவியர்களை மட்டும் வைத்து துாய்மை பணி நடந்திருப்பது புகைப்படம் ஆதாரத்துடன் தலைமையாசிரியர்களே அனுப்பி இருந்தும்,அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை