உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா

அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா

காரைக்குடி : காரைக்குடி அருகே புலிக்குத்தி அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இப்பகுதியில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவேண்டி புலிக்குத்தி கண்மாயில் உள்ள அய்யனார் கோயிலில் புலிக்குத்தி, கல்லுவயல், பொட்டகவயல் கிராமங்களை சேர்ந்த மக்கள் புரவி எடுப்பு விழா நடத்துவர். குதிரை செய்வதற்கு கடந்தவாரம் பிடிமண் வழங்கினர்.சூளை பொட்டலில் குதிரை செய்யும் பணியை மேற்கொண்டனர். நேற்றைய புரவி எடுப்பு விழா ஊர்வலத்தில் 6 காளை, 1 யானை, 31 குதிரைகள் ஊர்வலமாக சென்றது. நேற்று காலை கோயிலுக்கு புரவி எடுத்து சென்றனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ