உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ‛நோ என்ட்ரியில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

‛நோ என்ட்ரியில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

சிவகங்கை: சிவகங்கை நகரில் அரண்மனை பகுதி, நேருபஜார், கோட்டை முனியாண்டி கோவிலில் இருந்து மரக்கடை வரை, ரயில்வே மேம்பாலத்தின் இரு பகுதி ஒரு வழி பாதையாகும். இந்த பகுதியில் காலை, மாலை நேரங்களில் பள்ளி கல்லுாரி, அலுவலகம் செல்லக்கூடிய அவசரத்தில் வாகன ஓட்டிகள் மிகவும் வேகமாக செல்கின்றனர். இந்த பகுதி ஒரு வழி பகுதி என நினைத்து வேகமாக செல்லும்போது சிலர் விதிகளை மீறி எதிரே வாகனங்களில் வருவதால் விபத்து நிகழ்கிறது.அரண்மனை வாசலில் பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்பவர்கள் இடதுபுறம் உள்ள பகுதியிலும் எதிரே வருபவர்கள் வலது புறம் உள்ள பகுதியிலும் பயணிக்க வேண்டும்.ஆனால் இவற்றை காலை மாலை நேரங்களில் சிலர் பின்பற்றுவதில்லை.இதனால் முறையாக செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். அரண்மனை பகுதியில் இருந்து நேருபஜார் வழியாக மார்க்கெட் செல்லும் ரோட்டில் எதிரே கனரக வாகனங்கள் வரமுடியாத அளவுக்கு போலீசார் தடுத்துள்ளனர். ஆனாலும் ஒருசிலர் தடுப்பை நகர்த்தி வைத்து விட்டு அந்த ரோட்டை பயன்படுத்தி அரண்மனை பகுதிக்கு வாகனத்தில் செல்லுகின்றனர். இதனால் காலை நேரங்களில் இந்த பகுதி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மதுரை முக்கு பகுதியில் பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும் பஸ்கள் இடதுபுறமாக மானாமதுரை ரோட்டில் திரும்பி ஜஸ்டின் பள்ளி பக்கவாட்டு ரோட்டின் வழியாக மதுரை ரோட்டில் செல்ல வேண்டும்.ஆனால் காலை நேரத்தில் செல்லக்கூடி பஸ்கள் வாகனங்கள் போலீசார் இல்லாததை உணர்ந்து நேரடியாக மதுரை ரோட்டில் செல்கின்றனர். அதேபோல் மானாமதுரை ரோட்டில் இருந்து வரக்கூடிய வாகனங்களும் ஜஸ்டின் பள்ளி பக்கவாட்டு ரோட்டை சுற்றி வராமல் நேரடியாக நோ என்ட்ரியில் நுழைந்து வருவதால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே காலை மாலை நேரங்களில் டிராபிக் போலீசார் இவற்றை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு வருபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை