மேலும் செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
04-Apr-2025
மானாமதுரை: மானாமதுரையில் நேற்று மதியம் வெப்பத்தைதணிக்கும் வகையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சிஅடைந்தனர்.மானாமதுரை மற்றும்அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கடுமையாக அடித்து வருகிறது. ஏராளமானோர் வெப்பம் தாங்க முடியாமல் பகலில்வெளியே செல்லாமல் வீட்டுக்குள் முடங்கி வருகின்றனர்.மேலும் கோடை வெப்பத்தை தணிப்பதற்காக மக்கள் பழரசம், மோர், சர்பத், இளநீர் போன்றவற்றை அருந்தி வரும் நிலையில் அவற்றின் விலையும் சற்று உயர்ந்துஉள்ளது.இந்நிலையில் நேற்று மானாமதுரை பகுதியில் மதியம் 3:00 மணிக்கு பலத்த காற்றுடன் அரை மணி நேரம் மழை பெய்ததால் மானாமதுரை பகுதியில் வெப்பம்தணிந்து சற்று குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
04-Apr-2025