உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் கொட்டிய மழை

தேவகோட்டையில் கொட்டிய மழை

தேவகோட்டை: தேவகோட்டையில் இரண்டு தினங்களாக மழை மேகமாக, மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரண்டு தினங்களாக மலை பிரதேசங்களில் நிலவுவது போல் சாரல் மற்றும் கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் இரண்டு தினங்களாக இடையிடையே நல்ல மழையும் பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக விடுமுறை முடிந்து வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் சிரமப் பட்டனர். இதை போல பள்ளி விடுதிகளுக்கு வரும் மாணவ மாணவிகள் மழையில் நனைந்தே வந்தனர். தேவகோட்டையில் தொடர்ந்து கடும் குளிர் நிலவி வருகிறது. குளிரில் சிலருக்கு காய்ச்சல், ஜலதோஷம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை