உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மேலப்பசலை அரசுப்பள்ளி வளாகத்தில் தேங்கும் மழை நீர்

மேலப்பசலை அரசுப்பள்ளி வளாகத்தில் தேங்கும் மழை நீர்

மானாமதுரை : மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் மழை நீர் தேங்குவதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலப்பசலை அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த மழை காரணமாக தற்போது பள்ளி வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நிற்பதோடு அருகில் கண்மாய் இருப்பதாலும் பள்ளி வளாகப் பகுதியில் தண்ணீர் ஊறிக்கொண்டே வற்றாமல் கிடக்கிறது.மாணவர்கள் தேங்கி கிடக்கும் தண்ணீர் வழியாகத்தான் வகுப்பறை களுக்கும், கழிப்பறைகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.பெற்றோர்கள் கூறியதாவது, பள்ளி வளாகத்தை ஒட்டி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்தாலும் பள்ளி வளாகத்தில் தரைத்தளம் அமைக்காததால் அருகில் கண்மாய் இருப்பதால் பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் ஊறி வருகிறது.மேலும் மழைக்காலங்களில் அதிகளவு மழை நீரும் தேங்கி வருகிறது.இதனால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பள்ளி வளாகத்தில் தேங்கி கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதோடு தரைத்தளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை