உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வட்டார விளையாட்டு போட்டி  

வட்டார விளையாட்டு போட்டி  

சிவகங்கை: சிவகங்கை அருகே அம்மன்பட்டி, வீழனேரியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. நேரு யுவகேந்திரா சார்பில் நடத்தப்பட்ட போட்டிக்கு மாரியம்மன் விளையாட்டு கழக தலைவர் கணேசன், நேதாஜி இளைஞர் கழக தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள் அபிராமி, நவீன்குமார், அர்ச்சனா ஆகியோர் ஏற்பாட்டை செய்தனர். வாலிபால் போட்டியில் முதலிடம் வீழனேரி நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம், இரண்டாம் இடம் பாகனேரி கே.சி.பி.சி., அணி பெற்றது. கயிறு இழுத்தல் போட்டியில் முதலிடம் அம்மன்பட்டி மாரியம்மன் நண்பர்கள் நற்பணி மன்றம், இரண்டாம் இடம் வீழனேரி நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் பெற்றனர். மகளிருக்கான 100 மீட்டர் ஓட்ட போட்டியில் முதலிடம் வினோதினி, 2ம் இடம் வாகைவிஷாலி, 3 ம் இடம் மாலதி, மகளிர் குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் முருகேஸ்வரி, 2ம் இடம் சாந்தி, 3ம் இடம் லதா, ஆண்களுக்கான 100 மீட்ட ஓட்ட போட்டியில் முதலிடம் கிருஷ்ண குமார், 2ம் இடம் கிருஷ்ணன், 3ம் இடம் பாலகுமாரன், குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் சுதாகர், 2ம் இடம் கிருஷ்ணன், 3ம் இடம் அன்புநீதி ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி