உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சவுதியில் இறந்தவர்  குடும்பத்திற்கு நிவாரணம்

சவுதியில் இறந்தவர்  குடும்பத்திற்கு நிவாரணம்

சிவகங்கை: சவுதி அரேபியாவில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவித்தொகை ரூ.11.63 லட்சத்தை கலெக்டர் பொற்கொடி வழங்கினார். சிவகங்கையில் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. மக்களிடம் 333 மனுக்கள் பெறப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார். சிவகங்கை அருகே காஞ்சிரங்காலை சேர்ந்த நபர், சவுதி அரேபியாவில் பணி செய்யும் போது உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு நிவாரண தொகை ரூ.11 லட்சத்து 63 ஆயிரத்து 525க்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அனீஷ் சத்தார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை