உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரளிப்பாறை கிரிவலப்பாதை முழுமையாக்க கோரிக்கை

அரளிப்பாறை கிரிவலப்பாதை முழுமையாக்க கோரிக்கை

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அரளிப்பாறை கிரிவலப் பாதையை சீரமைத்து முழுமையாக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஐந்து நிலை நாட்டார்களால் நடத்தப்படும் மாசி மக மஞ்சுவிரட்டுக்கு பெயர் பெற்ற இந்தப் பாறை 3 கி.மீ., சுற்றளவு கொண்டது. மலை உச்சியில் பாலதண்டாயுதபாணி கோயில் உள்ளது. மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்காக 3 கி.மீ., தூரத்திற்கு தார்சாலையும், அரை கி.மீ., துாரத்திற்கு மெட்டல் சாலையும் அமைக்கப்பட்டது. இடையில் 100 மீட்டர் தூரத்தில் தனியார் பட்டா இடங்கள் வருவதால் அவ்வழியாக செல்ல பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அப்பகுதியை ஒட்டிய பாறையில் பக்தர்கள் இடையூறு இல்லாமல் நடந்து செல்லும் வகையில் தடுப்புச் சுவர் அமைத்து கிரிவல பாதையை முழுமையாக்கி சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை