மேலும் செய்திகள்
சாலை ஆய்வாளர்கள் சங்க மாநாடு
22-Dec-2025
திருப்புத்தூர்: இம்மாவட்டத்தில் 40 ஆண்டிற்கு முன் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற போலீசார் சந்திப்பு கூட்டம் நடந்தது. இங்கு 1985 டிச.,23ம் தேதியன்று பணியில் சேர்ந்த போலீசார், 40ம் ஆண்டு நிறைவு விழாவில் சந்தித்து கொண்டனர். 41ம் ஆண்டு துவக்க விழாவையும் நடத்தினர். முன்னாள் போலீசார் அமைப்பின் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் சங்க தலைவராக தங்கராஜ், செயலாளர் லட்சுமணன், பொருளாளர் நாகராஜ், துணை தலைவர் ருத்திராபதி, துணை செயலாளர் ஜேம்ஸ் ஆரோக்கியசாமி, துணை பொருளாளர் முகமது பக்ருதீன் தேர்வாகினர். நோய் பாதித்தவர்களுக்கு மருத்துவ செலவுக்கு ரூ.10 ஆயிரம், திருமண உதவி ரூ.5001, இயற்கை மரணம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரம் நிவராணம் வழங்குவது என முடிவுசெய்தனர். பிச்சை மூர்த்தி வரவு செலவு அறிக்கை வாசித்தார். சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
22-Dec-2025