ரயிலில் விழுந்த இளைஞர் வலது கை துண்டிப்பு
சிவகங்கை: காளையார்கோவில் அருகேயுள்ள மேட்டுபட்டியை சேர்ந்தவர் டேவிட்ஜான்பால் 33. இவர் நேற்று சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் நீண்ட நேரம் நின்றுள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரம் சென்ற விரைவு ரயில் சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் அருகே மாலை 6:15க்கு வரும்போது ரயில் முன் விழுந்தார். இதைப்பார்த்த டிரைவர் ரயிலை நிறுத்தினார். அவரை சிறிது துாரம் இழுத்துச் சென்று ரயில் நின்றது. தண்டவாளத்தில் ரயிலுக்கு அடியில் வலது கை துண்டிக்கப்பட்டு சிக்கியிருந்தவரை பயணிகள் மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். போலீசார் விசாரித்ததில் டேவிட்ஜான்பால் தவறி விழுந்ததாக தெரிவித்தார்.மானாமதுரை ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.