உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தமிழகத்தில் ரூ.1266 கோடியில் சாலை விரிவாக்கம் * அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

தமிழகத்தில் ரூ.1266 கோடியில் சாலை விரிவாக்கம் * அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சிவகங்கை:தமிழகத்தில் ரூ.1266 கோடி செலவில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது என சிவகங்கையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.அவர் கூறியதாவது:கல்வி, மருத்துவத்தை இரண்டு கண்ணாக இந்த அரசு கவனித்து வருகிறது. மாநில அளவில் ரூ.1266 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு, விரிவாக்க பணிகள் நடந்துள்ளது. 1281 தரைப்பாலங்கள் மாநிலத்தில் உள்ளன. இவற்றை மேம்பாலங்களாக அமைத்தால் வளர்ச்சி ஏற்படும். சிவகங்கையில் ரூ.48 கோடியில் 49 தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றியுள்ளோம். 43 கி.மீ., துார ஊராட்சி ஒன்றிய ரோடு பணிகள் ரூ.42 கோடியில் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சாலை விபத்து அதிகம் நடக்கிறது. விபத்துக்களை குறைக்க ஆய்வு நடத்தி, 47 இடங்கள் அதிக விபத்து நடக்கும் இடமாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக ரூ.99 கோடி செலவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை சந்திப்பில் நடக்கும் விபத்தை தவிர்க்க 8 ரோடுகளில் ரூ.4 கோடியில் பாதுகாப்பு பணி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் இருந்து 10.80 கி.மீ., ல் பைபாஸ் ரோடு அமைக்க திட்டமிட்டு, முதற்கட்டமாக 7.60 கி.மீ., துாரத்திற்கு ரூ.110 கோடிக்கான பணிகள் முடியும் நிலையில் உள்ளது. எஞ்சிய 3.20 கி.மீ., துார ரோடு பணி விரைவில் துவங்க உள்ளன. முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 4 வழிச்சாலை திட்டத்தில் ராமநாதபுரம் - சிவகங்கை - மேலுார் வரை 15 கி.மீ., துாரத்திற்கு ரூ.200 கோடியில் ரோடு அமைக்கப்பட்டுள்ளன. * டோல்கேட் அகற்ற கோரிக்கை: தமிழகத்தில் 48 டோல்கேட் உள்ளது. இதில், கால அவகாசம் முடிந்த 13 டோல்கேட்களை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் அளித்த பதிலில் சாலை மேம்பாடு, விபத்து பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால், டோல்கேட்-களுக்கு கால அவகாசம் முடியாது என தெரிவித்தனர். இதனால் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்து விட்டனர். மாநில அளவில் 60 கி.மீ.,க்கு உட்பட்டுள்ள டோல்கேட்களை அகற்ற மத்திய அரசிடம் தெரிவித்தேன். ஒன்றன் பின் ஒன்றாக மாற்றி அமைப்பதாக பதில் அளித்தனர். ஆண்டுக்கு 4000 கி.மீ., ஊராட்சி ஒன்றிய சாலை, 1000 கி.மீ., கிராம சாலை மேம்படுத்தப்படும், என்றார்.///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை