உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் வடிகால் வசதி இல்லாத சாலை; ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுவதால் சேதமாகும்

திருப்புத்துாரில் வடிகால் வசதி இல்லாத சாலை; ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுவதால் சேதமாகும்

திருப்புத்துார் முக்கியமான போக்குவரத்து மையமாக உள்ளதால் திருப்புத்துார் வழியாக பல தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. முக்கிய ரோடுகளான சிங்கம்புணரி ரோடு, காரைக்குடி ரோடு தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கான்கிரீட் வடிகால் வசதி ரோட்டின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட புதுக்கோட்டை ரோட்டில் வடிகால் வசதி இல்லை.நான்கு ரோட்டிலிருந்து புதுப்பட்டி வரை அதிகமான குடியிருப்பு உள்ளன. ரோட்டோரத்தில் உள்ள மருபாண்டியர் நகர் பகுதியில் மட்டும் சிறிது துாரத்திற்கு வடிகால் வசதி உள்ளது. இந்த ரோட்டின் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் வடிகால் அமைத்து ரோட்டை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் ரோடு சேதமாவது குறைவதுடன் அப்பகுதி கழிவு நீர் ரோட்டில் செல்வதும் தவிர்க்கப்படும். பாதசாரிகள் நடந்து செல்ல பாதுகாப்பான நடைபாதையும் கிடைக்கும். இதே போல மதுரை ரோட்டில் பகுதி, பகுதியாக வடிகால் உள்ளது. மழை பெய்தால் சில இடங்களில் மழைநீர் வடிய தாமதமாகிறது. ரோடு சேதமடைவதுடன், போக்குவரத்தும் பாதிக்கிறது. நான்கு ரோடு முதல் கல்லுாரி வரை மதுரை ரோட்டில் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறையினர் முழுமையான வடிகால் அமைக்க வேண்டியது அவசியமாகும். மேலும் பஸ் ஸ்டாண்ட் முதல் தென்மாப்பட்டு வரை கண்டரமாணிக்கம் ரோட்டிலும் முழுமையான வடிகால் வசதி இல்லை. சில இடங்களில் மட்டும் துார்ந்து போன வடிகால் உள்ளது. இதனால் போஸ்டாபீஸ் ரோடு -கண்டரமாணிக்கம் ரோடு சந்திப்பில் மழை பெய்தால் நீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது. இந்த ரோட்டின் இரு புறமும் முழுமையான வடிகால் வசதியை ஏற்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை