உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலைப்பணியாளர் ஆர்ப்பாட்டம்

சாலைப்பணியாளர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: சிவகங்கை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன் சாலைப்பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றித்தர வலியுறுத்தி, நீதி தராசினை கையில் ஏந்தி, கும்மியடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் மாரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜா கோரிக்கை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் சின்னப்பன், பாலசுப்பிரமணியன், வீரையா, பாண்டி, சுதந்திரமணி, கணேசன் பங்கேற்றனர். தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, மாவட்ட செயலாளர் நடராஜன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க துணை தலைவர் கார்த்திக், சாலை ஆய்வாளர் சங்க மாவட்ட பொருளாளர் முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் சதுரகிரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ