போலீஸ் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
சிவகங்கை: தமிழக காவல் துறையில் 1993ம் ஆண்டு பணியில் சேர்ந்த 3200 போலீசார் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள் காக்கும் கரங்கள் என்ற ஒரு குழுவை அமைத்து அதன் மூலம் தங்கள் பேட்ஜ் போலீசாருக்கு உடல்நிலை சரியில்லாத போது அவசர காலத்திற்கு உதவி செய்தும், இறப்பு ஏற்படும் போது ஆறுதல் நிதி வழங்கியும் வருகின்றனர். இந்த ஆண்டு கடந்த 3 மாதங்களில் மட்டும் இறந்த 9 போலீசாருக்கு ரூ.45 லட்சம் நிதியை பங்களிப்பு அளித்து அதனை தலா 5 லட்சமாக இறந்த போலீசாரின் குடும்பத்திற்கு அளித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவில் பணிபுரிந்த சிறப்பு எஸ்.ஐ., ராஜேந்திரன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் காக்கும் கரங்கள் குழுவால் வழங்கப்பட்டது.