உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனைக் கூட்டம்

ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனைக் கூட்டம்

சிங்கம்புணரி: திருப்புத்துாரில் வரும் அக். 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, சிங்கம்புணரியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட பொறுப்பாளர் குகன் தலைமை வகித்தார். கோட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன், மாவட்ட கோசேவா பொறுப்பாளர் தினேஷ், ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் தங்கபாண்டி, பாரதிய மஸ்துார் சங்க மாவட்ட பொறுப்பாளர் செந்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை