மேலும் செய்திகள்
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
30-Jul-2025
சிவகங்கை : உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு நிதி ஒதுக்காமலும், கடும் பணிச்சுமை வழங்குவதை கண்டித்து அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஜ் தலைமை வகித்தார். செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார துணை தலைவர் ரமேஷ், மானாமதுரையில் செந்தில்குமார், இளையான்குடியில் வட்டார தலைவர் பிரபாகரன், காளையார் கோவிலில் வட்டார செயலாளர் கோபாலகிருஷ்ணன், தேவகோட்டை வட்டார செயலாளர் கண்ணன், கண்ணங்குடியில் முன்னாள் மாவட்ட துணை தலைவர் மகாலிங்கம், எஸ்.புதுாரில் நிர்வாகி ஜெயசூர்யா, சிங்கம்புணரியில் செயலாளர் ராம்பிரசாத், திருப்புத்துாரில் செயலாளர் சின்னையா, திருப்புவனத்தில் நிர்வாகி மீனா ஆகியோர் தலைமையில் வெளி நடப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
30-Jul-2025