இருளில் மூழ்கிய எஸ்.புதுார்: அச்சத்தில் மக்கள்
எஸ்.புதுார்: எஸ்.புதுாரில் பஸ் நிறுத்தத்தை ஒட்டிய கடைவீதி பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கியுள்ளது.ஒன்றிய தலைநகரான எஸ்.புதுார் கிராமத்தின் பஸ் ஸ்டாப் அருகே ஊராட்சி அலுவலகம், வங்கிகள் மற்றும் கடைகள் உள்ளன. இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 2 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் முடிந்த சில தினங்களில் இந்த விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி இரவு முழுவதும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. கடைகளில் உள்ள விளக்கு வெளிச்சத்தில் மட்டுமே மக்கள் நடமாட முடிகிறது. இதனால் திருட்டு அச்சத்துடன் மக்கள் செல்கின்றனர். தெருவிளக்குகளை சீரமைப்பதுடன், கூடுதல் தெருவிளக்குகளை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.