உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எந்தக்கட்சியுடன் கூட்டணி சரத்குமார் வருத்தம்

எந்தக்கட்சியுடன் கூட்டணி சரத்குமார் வருத்தம்

காரைக்குடி:எதற்கெடுத்தாலும் எந்த கட்சியுடன் கூட்டணி என்றே கேட்கின்றீர்களே... தனித்து நிற்க மாட்டீர்களா என்று கேட்க மாட்டீர்களா என்று சமத்துவக் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பினார்.சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தளக்காவூரில் வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார், மனைவி ராதிகா, குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.பின்பு அவர் கூறியது: சொந்த ஊரான தளக்காவூரில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. அனைவரும் கூட்டணி யாருடன் என்றே கேட்கிறீர்கள். தனித்து நிற்கிறீர்களா என கேட்க மாட்டேன் என்கிறீர்கள். பிப்., 24ல் கும்பகோணத்தில் நடைபெறும் உயர்மட்ட குழுவில் லோக்சபா தேர்தல் குறித்து முடிவெடுப்போம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை