மேலும் செய்திகள்
விளையாட்டு தின விழா
01-Nov-2025
தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகர் புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா,விளையாட்டு விழா நடந்தது. சிவகங்கை பிஷப் லூர்து ஆனந்தம் தலைமை வகித்தார். கவுன்சிலர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். தாளாளர் அந்தோணிசாமி வரவேற்றார். முதல்வர் சூசை மாணிக்கம் அறிக்கை வாசித்தார். சுற்றுப்புற வட்டார பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கான தடகள போட்டிகள் நடந்தன. புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவியர் தொடர் ஓட்டத்தில் முதலிடம் வென்றனர். வென்ற மாணவர்களுக்கு தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாபு வின்சென்ட் ராஜ், தலைமையாசிரியர் சேவியர்ராஜா பரிசுகளை வழங்கினர்.
01-Nov-2025