அறிவியல் தின விழா
சிவகங்கை: காளையார்கோவில் அருகே கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் மீனாட்சி வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். ஆசிரியர் கமலம்பாய் வாழ்த்தி பேசினார். மாணவர்களுக்கான விஞ்ஞான துளிர் இதழ் வழங்கப்பட்டு அதில் உள்ள பல்வேறு அறிவியல் கருத்துகள் விவாதிக்கப்பட்டன. ஆசிரியர் கீதா நன்றி கூறினார்.