உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  விற்பனையாளர் சஸ்பெண்ட்

 விற்பனையாளர் சஸ்பெண்ட்

சிவகங்கை: திருப்புத்துார் புதுக்கோட்டை ரோட்டில் பாம்கோ 3ம் நம்பர் ரேஷன் கடை செயல்படுகிறது. விற்பனையாளராக பாலசுப்பிரமணியன் பணியாற்றினார். டிச.24ஆம் தேதி இந்த ரேஷன் கடையை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடையிலிருந்து 190 மூடை (50 கிலோ) அரிசி, 11 மூடை சர்க்கரை, 7 மூடை கோதுமை, 11 பெட்டி பாமாயில் (110 பாக்கெட்) மாயமானதை கண்டறிந்தனர். தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. 2 கூட்டுறவு சார்பதிவாளர்களை நியமித்து கடையில் விசாரணை நடத்தினர். விற்பனையாளர் பாலசுப்ரமணியன் தற்காலிக பணிநீக்கம் செய்து சிவகங்கை பாம்கோ மேலாண்மை இயக்குனர் பாலு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை