மேலும் செய்திகள்
என்.பி.ஆர்.,ல் 2கே25 போட்டிகள்
31-Jan-2025
இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பில் செயற்கை நுண்ணறிவு வணிகவியலில் நெறிமுறைகள் மற்றும் வெளிப்படை தன்மை குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. துறை தலைவர் நைனா முகமது வரவேற்றார். முதல்வர் ஜபருல்லாகான் தலைமை வகித்தார்.உதவி பேராசிரியர் பவுசியா சுல்தானா சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.பாண்டிச்சேரி காரைக்கால் வளாக வணிகவியல் துறை பேராசிரியர் அமிலன், திருச்சி பாரதிதாசன் பல்கலை வணிகவியல் மற்றும் நிதி ஆய்வுகள் துறை தலைவர் வனிதா, சேலம் அரசு கல்லூரி வணிகவியல் துறை தலைவர் சையது இப்ராஹிம் பேசினர். உதவி பேராசிரியர்கள் நசீர் கான் சம்சுதீன் இப்ராஹிம் நாசர் ஒருங்கிணைத்தனர்.ஆட்சி குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், கல்வியியல் கல்லூரி முதல்வர் முகமது முஸ்தபா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் ஜாகிர் உசேன் நன்றி கூறினார்.
31-Jan-2025