உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நோபல் பரிசு குறித்த கருத்தரங்கம்

நோபல் பரிசு குறித்த கருத்தரங்கம்

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை., இயற்பியல் துறை சார்பில் நோபல் பரிசு குறித்த கருத்தரங்கம் நடந்தது.அழகப்பா பல்கலை., துணை வேந்தர் க.ரவி தலைமை ஏற்று பேசினார்.கேரள மாநிலம் கொச்சின்அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை., பேராசிரியர் பிரமோத் கோபிநாத், திருச்சி பாரதிதாசன் பல்கலை., இயற்பியல் துறை பேராசிரியர் சபரி கிரிசன், அழகப்பா பல்கலை., நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் சக்திவேல் கணிதத்துறை தலைவர் அன்பழகன் பேசினர். அழகப்பா பல்கலை., இயற்பியல் துறை தலைவர் சங்கரநாராயணன் வரவேற்றார். உதவி பேராசிரியர் ரமேஷ் பிரபு நன்றி கூறினார். ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சேகர், பழனிச்சாமி மற்றும் பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள்மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி