உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் தேங்கும் கழிவுநீர்; தொற்று நோய் பரவும் அபாயம்

மானாமதுரையில் தேங்கும் கழிவுநீர்; தொற்று நோய் பரவும் அபாயம்

மானாமதுரை; மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு பகுதிகளிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.தெருக்களில் கழிவுநீர் வாய்க்கால் உள்ள நிலையில் வீடுகள், மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர் இந்த வாய்க்கால் மூலம் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மானாமதுரை பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதை தொடர்ந்து கழிவுநீர் வாய்க்கால்களில் அதிகளவு கழிவு நீர் தேங்கி உள்ளதாகவும் இதனை முறையாக அகற்றாமல் இருப்பதால் தெருக்களில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.மேலும் பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள ஏ.பி.எஸ்.,காம்பவுண்ட் பகுதியில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக கழிவுநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை