நர்சுகள் பற்றாக்குறை
மாவட்ட அளவில் சுகாதாரத்துறையின் கீழ் 52 ஆரம்ப சுகாதார நிலையம், 277 துணை சுகாதார நிலையம் செயல்படுகிறது.ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக உள், வெளிநோயாளிகள், கர்ப்பிணிகள் 200 பேர் வரை வருகின்றனர். மாவட்ட அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே 200 நர்சுகள் பணிபுரிய வேண்டும்.ஆனால் இங்கு 120 பேர் மட்டுமே உள்ளனர். இங்கு 80 காலிபணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4 நர்சுகள் இருக்க வேண்டிய நிலையில், 2 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். குறிப்பாக வெங்களூர், திருப்பாச்சேத்தி போன்ற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நர்சுகளே இல்லை.இதனால், நர்சுகள் மாற்றுப்பணியாக செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு நர்சுகள் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய வேண்டும். ஆனால், இங்கு நர்சுகள் பற்றாக்குறையால், 12 மணி நேரம் வரை பணிபுரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால், பணிச்சுமையால் நர்சுகள் தவிப்பதோடு, மன உளைச்சலுக்கு உள்ளாவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் விஜய்சந்திரன் கூறியதாவது: மாவட்ட அளவில் ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் உள்ள நர்சுகள் காலிபணியிட விபரங்களை அரசுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் அரசு நர்சுகள் பணியிடத்தை நிரப்பும் என்றார்.சிவகங்கை, ஆக.26-மாவட்ட அளவில் அரசு ஆரம்ப சுகாதார, துணை சுகாதார நிலையங்களில் நர்சுகள் பற்றாக்குறையால், கூடுதல் நேர பணிச்சுமையில் தவிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.