உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சிவகங்கை காரைக்குடி பா.ஜ., விருப்பம் 

 சிவகங்கை காரைக்குடி பா.ஜ., விருப்பம் 

சிவகங்கை: -சிவகங்கை, காரைக்குடி சட்டசபை தொகுதியில் பா.ஜ., போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை கட்சியினர் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் வலியுறுத்தியுள்ளனர். கூட்டணியில் எதிர்பார்க்கும் தொகுதி பட்டியலை மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்துள்ளார். அதில், சிவகங்கை, காரைக்குடி ஆகிய 2 சட்டசபை தொகுதி அடங்கும். இந்த தொதிகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் வாய்ப்பு கேட்டு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பா.ஜ., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: திருச்சியில் பிரசாரத்திற்கு வந்த நயினார் நாகேந்திரனை நேரடியாக சந்தித்து, சிவகங்கை, காரைக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருமாறு தெரிவித்துள்ளோம். யாரை வேட்பாளராக கட்சி அறிவித்தாலும், அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்ற உறுதியையும் அளித்துள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை