உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் ஜீப் கவிழ்ந்து 2 பேர் பலி

காரைக்குடியில் ஜீப் கவிழ்ந்து 2 பேர் பலி

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மகேந்திரா ஜீப் தலைகுப்புற கவிழ்ந்ததில், டிரைவர் கணேசன்,27. பீகாரை சேர்ந்த சுரேஷ்ராய், 26 பலியாகினர். பீகாரை சேர்ந்தவர்கள் அவநாஸ்குமார், 23. கரன், 21. அஜய், 22. கவுதம், 20 உட்பட சிலர், காரைக்குடி பகுதியில் நடக்கும் கட்டட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நேற்று, காலை 8.45 மணிக்கு, மகேந்திரா ஜீப்பில் அரியக்குடியில் இருந்து கோட்டையூர் நோக்கி சென்றனர்.ஜீப்பை வேலங்குடியை சேர்ந்த கணேசன் ஓட்டினார். ஸ்ரீராம்நகர் ரயில்வே கேட்டை கடந்து வளைவில் திரும்பியபோது, ஜீப் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், சம்பவ இடத்திலேயே ஜீப் டிரைவர் பலியானார். காயமடைந்த பீகாரை சேர்ந்த சுரேஷ்ராய், காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். வேனில் சென்ற மற்ற 5 பேர் காயமுற்றனர். காரைக்குடி இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன், ராஜசேகர் எஸ்.ஐ., விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ