உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விபத்தில் இறந்த பால்காரர் குடும்பத்துக்கு ரூ.3.64 லட்சம்

விபத்தில் இறந்த பால்காரர் குடும்பத்துக்கு ரூ.3.64 லட்சம்

சிவகங்கை : திருப்புவனம் அருகே விபத்தில் இறந்த பால்காரர் குடும்பத்திற்கு 3.64 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சிவகங்கை செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. திருப்புவனம் புதூர் மேலவீதியை சேர்ந்தவர் தண்டீஸ்வரன், 39. திருப்புவனம் பால் கூட்டுறவு சங்கத்தில் பால் வியாபாரியாக இருந்தார். கடந்த 2004ம் ஆண்டு அக்.,1ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சக ஊழியர்களுடன் பால்கறக்க சென்றார். மதுரை - மண்டபம் ரோடு லாடனேந்தல் விலக்கு அருகே சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த அம்பாசிடர் கார் மோதி விபத்திற்குள்ளானார். பலத்த காயமடைந்த அவர் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கணவர் இறப்பிற்கு இழப்பீடு கோரி காயத்ரி, சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சோலைமலை, இறந்த பால்காரர் குடும்பத்திற்கு மதுரை நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் கம்பெனி நிர்வாகம் இழப்பீடாக, 3.64 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ