மேலும் செய்திகள்
காரைக்குடியில் 674 பேருக்கு லேப்டாப் வழங்கல்
1 hour(s) ago
மானாமதுரை ரயில்வே ஜங்ஷனில் போதிய கூரை இல்லாததால் அவதி
1 hour(s) ago
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
2 hour(s) ago
துாய்மை பணி முகாம்
2 hour(s) ago
திருப்புவனம் : திருப்புவனம் மக்களின் பல ஆண்டு கோரிக்கையான பஸ் ஸ்டாண்ட், நிழற்குடைக்கு சட்டப்படி தீர்வு காணப்படும் என வேட்பாளர் வக்கீல் புவனேஸ்வரி பிரச்சாரம் செய்தார். திருப்புவனம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் வக்கீல் புவனேஸ்வரி பேசியதாவது: அவர் கூறியதாவது: பல ஆண்டு கோரிக்கையான பஸ்ஸ்டாண்ட், நிழற்குடைக்கு சட்டப்படி போராடி விரைவில் அமைக்கப் பாடுபடுவேன். பழையூர் பகுதியை நகர் மின் சப்ளையோடு இணைப்பேன். தனி தாலுகா ஆக்கிட முயற்சிப்பேன். ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக்கப்படும்.18 வார்டுகளிலும் மகளிர் சுகாதார வளாகம், குளியலறை, எம்.ஜி.ஆர்.,நகருக்கு பாலம்,திருப்புவனம், புதூரில் சலவைமையம் அமைப்பேன். தனியார் வசமுள்ள வாரச்சந்தை, தினசரி மார்க்கெட் வசூலை பேரூராட்சி மூலம் நடத்தி பேரூராட்சிக்கு வருவாயை அதிகப்படுத்துவேன். ஆக்கிரமிப்பில் உள்ள பேரூராட்சி இடத்தை மீட்டு கட்டட வசதி, விரிவாக்கப்பகுதியில் ரோடு, தெருவிளக்கு, கழிவுநீர் வசதி, பழுதடைந்துள்ள துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பிற்கு பதில் புதிய குடியிருப்பு, 12வது வார்டில் உள்ள தண்ணீர் தொட்டிபோல் அனைத்து வார்டுகளிலும் ஏற்படுத்தப்படும். பொதுத்தேர்வில் அதிக மார்க் பெறும் ஐந்து மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். பொழுதுபோக்க பூங்கா, நகரின் மையப்பகுதியில் நூலகம் அமைக்கப்படும். மாநில அளவில் திருப்புவனத்தை முன்னோடி பேரூராட்சியாகவும், தூய்மையான நகராக்குவதற்கும் அயராது பாடுபடுவேன்'. என்றார்.முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கே.கே. பாலசுப்பிரமணியன், நகர் காங்., தலைவர் அயோத்தி, இளைஞர் காங்., தலைவர் பாரத்ராஜா, கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago