மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
11 hour(s) ago
பயிற்சி முகாம்
11 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
11 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
11 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
11 hour(s) ago
சிவகங்கை:திருப்புத்தூரில் 2.32 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக சகோதரி உட்பட 4 பேர் மீது சிவகங்கை நில அபகரிப்பு குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.திருப்புத்தூரை சேர்ந்தவர் நாகரத்தினம். இவரது மகன்கள் பொன்னழகு, அம்மையப்பன், மகள்கள் மீனாம்பாள், அமுதா, சித்ரா. மஞ்சுளா தியேட்டர் ரோட்டில் நாகரத்தினத்திற்கு சொந்தமான 2.32 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தை 87ம் ஆண்டு டிச.,14ம் தேதி மகள்களுக்கு உயில் எழுதி கொடுத்தார். இதற்கிடையில், அதே இடத்தை நாகரத்தினம், 2009ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, தனது இரு மகன்களுக்கும் திருப்புத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இனாம் செட்டில்மென்ட் அடிப்படையில் பதிவு செய்து கொடுத்தார்.நிலத்தை இனாம் சென்டில்மெண்ட் செய்த பிறகு, மீனாம்பாள், தனது தந்தை எழுதி கொடுத்த உயிலை பயன்படுத்தி, சொத்துக்களை தனது கணவர் திருஞானசம்பந்தம் பெயருக்கு, கடந்த மாதம் 4ம் தேதி பவர் எழுதி கொடுத்தார். இந்த பவரின் மூலம் திருப்புத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் உதவியுடன், மேலூரை சேர்ந்த மதிசேகருக்கு விற்றுள்ளனர்.புகார்: இது குறித்து அறிந்த பொன்னழகு, எஸ்.பி., பன்னீர்செல்வத்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவுபடி, பால்ராஜ் டி.எஸ்.பி., சிறப்பு எஸ்.ஐ., கனகராஜ் ஆகியோர் மீனாம்பாள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago