மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
4 hour(s) ago
பயிற்சி முகாம்
4 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
4 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
4 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
4 hour(s) ago
திருப்புத்தூர் : திருப்புத்தூர் ஒன்றிய கூட்டத்திற்குஒன்றியக்குழுத் தலைவர் வள்ளி தலைமை வகித்தார். ஆணையாளர் ஜான் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். மேலாளர் பிச்சை வரவேற்றார்.கவுன்சிலர்கள் விவாதத்தின் போது, பொது நிதியில் தேர்வு செய்யப்பட்ட வேலைகளில் அனுமதியானது எது, அந்த வேலைகளுக்கு சிமென்ட் வழங்கப்படுமா? ஊராட்சிகளில் பழுதாகியுள்ள போர்வெல் பழுது நீக்கப்படுமா, கே.வைரவன்பட்டி இணைப்பு ரோடு பழுதடைந்துள்ளதை சரி செய்ய கோரிக்கை விடுத்தனர்.பி.டி.ஓ. ஜான் செல்வராஜ் பதிலளிக்கையில், 'அனைத்து வேலைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கலெக்டர் அனுமதி தந்தால் மட்டும் சிமென்ட் வழங்கப்படும். போர்வெல் அனைத்தும் பழுது நீக்கப்படும். கே.வைரவன்பட்டி இணைப்பு ரோடு நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்படும்' என்றார்.துணைத் தலைவர் கணேசன்,ஒன்றியக் கவுன்சிலர்கள் சந்திரன், மெய்யப்பன்,மாணிக்கம், அய்யாவு,சண்முகநாதன், தனலெட்சுமி, அந்தோணிசாமி, கஸ்தூரி, லதா,தமிழரசி,காளிமுத்து மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago