உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிளஸ் 2வில் கோட்டைவிட்டதை 10ம் வகுப்பில் தேர்ச்சியில் பிடித்த சிவகங்கை 

பிளஸ் 2வில் கோட்டைவிட்டதை 10ம் வகுப்பில் தேர்ச்சியில் பிடித்த சிவகங்கை 

சிவகங்கை: பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் 6ம் இடம்பிடித்து தேர்வு சதவீதத்தில் கோட்டை விட்ட சிவகங்கை, நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் சாதனை புரியும் விதமாக மாநில அளவில் முதலிடம்பிடித்தது.சிவகங்கை மாவட்ட அளவில் 162 பள்ளிகளை சேர்ந்த 15,900 மாணவர்கள்பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில், 15,377 பேர் 96.71 சதவீத தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 6ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. 2023-2024ம் கல்வி ஆண்டில் 97.42 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2 ம் இடம் பிடித்திருந்த நிலையில், இந்த கல்வி ஆண்டில் மாநில சாதனையில் 6 ம் இடத்திற்கு தள்ளப்பட்டு, கோட்டைவிட்டது. இது மேல்நிலை கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களிடையே அதிருப்தியையும், மாணவர்களுக்கு மனசோர்வையும் ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் பிளஸ் 2வில் கோட்டை விட்ட சிவகங்கை, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் சாதிக்கும் விதமாக 278 பள்ளிகளை சேர்ந்த 17,679 மாணவர்கள் தேர்வினை எழுதிய நிலையில் 17,380 பேர் 98.31 சதவீத தேர்ச்சி பெற்று, மாநில அளவில் முதலிடத்திற்கு சென்றனர். இத்தேர்வு முடிவு மனச்சோர்வில் இருந்த கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு, ஆறுதல் அளிக்கும் விதமாக பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் மாநில அளவில் முதலிட சாதனை படைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை