தொடர் மழையால் வீடுகளில் பாம்பு
திருப்புத்துார் : திருப்புத்துாரில் வீடுகளில் புகுந்த பாம்புகளை தீயணைப்புத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.காளியம்மன் கோயில் தெரு சமாதானபுரத்தில் ஜெரால்டு என்பவரின் வீட்டின் வாயிலில் பாம்பை பார்த்த குடும்பத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் ஆனந்த் தலைமையில் வந்த குழுவினர் வீட்டினுள் இருந்த பாம்பை பிடித்தனர். வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, மதகுபட்டி மண்மலை காட்டில் விடப்பட்டது.கணேஷ் நகரை சேர்ந்த கார்த்தி என்பவரது வீட்டில் தண்ணீர் தொட்டி யில் பாம்பை பார்த்த குடும்பத்தினர் தகவல் அளிக்க அங்கேயும் தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடித்து சென்றனர். பிறகு மீண்டும் வந்து குட்டி பாம்பையும் பிடித்தனர். இரு பாம்புகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.