சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
தேவகோட்டை: தேவகோட்டை ஷீரடி சாய்பாபா கோயிலில் விஜயதசமி மற்றும் சாய்பாபாவின் 107வது சமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரத்தி பூஜைகள் நடந்தன. மாலையில் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து பக்தர்களால் தங்க ரதம் இழுக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. தேவகோட்டை பட்டுக்குருக்கள் நகரில் உள்ள சாய்பாபா கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.