உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எஸ்.எஸ்.ஐ., தாக்கியவர் கைது

எஸ்.எஸ்.ஐ., தாக்கியவர் கைது

சிவகங்கை: சிவகங்கையில் போதையில் எஸ்.எஸ்.ஐ., தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.இளையான்குடி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் பார்த்திபன். இவர் நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு பழநி தைப்பூச விழாவிற்கு பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டு பஸ்சில் சிவகங்கை வந்தார். மரக்கடை பஸ் ஸ்டாப்பில் இறங்கி தனது வாகனத்தை எடுப்பதற்காக கோட்டை முனியாண்டி கோவில் அருகே நடந்து சென்றார்.அப்போது எதிரே போதையில் நடந்து வந்த குட்டிதின்னி கிராமத்தை சேர்ந்த போஸ் மகன் சதன் 35. எஸ்.எஸ்.ஐ., பார்த்திபனை இடித்து தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.எஸ்.எஸ்.ஐ., பார்த்திபன் கொடுத்த புகாரில் சதனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை