விபத்தில் எஸ்.எஸ்.ஐ., காயம்
சிவகங்கை: சிவகங்கை அருகே வாணியங்குடி சின்னதம்பி மகன் குபேந்திரன் 48. இவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் எஸ்.எஸ்.ஐ., ஆக பணிபுரிகிறார்.நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு சிவகங்கையில் இருந்து காளையார்கோவிலுக்கு டூவீலரில் சென்றார். நாட்டரசன்கோட்டை அருகே விசயமாணிக்கம் விலக்கு பகுதியில் செல்லும் போது எதிரே டூவீலரில் வந்த விசயமாணிக்க கோட்டை தவம் 18 திரும்பியுள்ளார்.எஸ்.எஸ்.ஐ., குபேந்திரன் சென்ற டூவீலர் அவர் மீது மோதியதில் குபேந்திரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.