உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச் தேர்பவனி   இன்று காலை திருவிழா நிறைவு  

புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச் தேர்பவனி   இன்று காலை திருவிழா நிறைவு  

மானாமதுரை : சிவகங்கை அருகே வி.மிக்கேல்பட்டணம் புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச் திருவிழா தேர்பவனி நடந்தது. இங்கு செப்., 19 அன்று மறை மாவட்ட பொருளாளர் ஆரோன் கொடியேற்றி வைத்து திருவிழாவை துவக்கினார். தினமும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு, நவ நாள் திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து கொடி பவனி நடைபெற்றது. புதிதாக கட்டிய சூசையப்பர் கெபியை மைக்கேல்ராஜ் அர்ச்சிப்பு செய்து திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித மிக்கேல் அதிதுாதர் எழுந்தருளினார். சர்ச் வளாகத்தில் இருந்து தேர் பவனி துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று காலை 8:30 மணிக்கு புனித மரியன்னை சர்ச் பங்கு தந்தை ெஹன்றி ஜெரோம் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஜெபமாலை ராஜா தலைமையில் பங்கு தந்தையர்கள் நற்கருணை பவனி நடைபெற்றது. இன்று (செப்., 29) காலை 9:00 மணிக்கு பங்கு தந்தை ஜேம்ஸ் தலைமையில் கொடியிறக்க நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாட்டை கிராம கமிட்டி தலைவர் மரியான் தலைமையில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை