மேலும் செய்திகள்
காரைக்குடி, கல்லலில் கொட்டி தீர்த்த மழை
28-Sep-2024
காரைக்குடி, : கல்லல் ஊராட்சியில் தொடர் மழையால் சாலையில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.கல்லல் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில், புரண்டி, கல்லல், மருங்கிப்பட்டி, இந்திரா நகர் உள்ளிட்ட சிற்றுார்கள் உள்ளன. கல்லல் ஊராட்சியில், வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெருமாள் கோயில் வீதி அருகே தொடர் மழை காரணமாக தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. சந்தை மற்றும் பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையான இச்சாலையில் ஏராளமான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். தேங்கி கிடக்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் திணறி வருகின்றனர். வரத்து கால்வாய் பராமரிப்பு செய்யாததே இதற்கு காரணம். கால்வாய் பராமரித்து தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28-Sep-2024