உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனு போலீஸ், வருவாய் துறைக்கு கண்டனம் 

ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனு போலீஸ், வருவாய் துறைக்கு கண்டனம் 

சிவகங்கை : திருப்புவனம் ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம் ஒரு தலைபட்ச நடவடிக்கை எடுத்த போலீஸ், வருவாய்துறையை கண்டிப்பதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சிவகங்கையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். மாநில துணை பொது செயலாளர் அருள்ராஜ் தீர்மானங்கள் குறித்து பேசினார். தீர்மானம் திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்கள் கிடந்தது குறித்து வருவாய், போலீஸ் துறை முறையாக விசாரிக்கவில்லை. மாறாக விசாரணை என நில அளவை துறை அலுவலர்களை அழைத்து மனுக்களை ஆற்றில் வீசியதை ஒத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். மேலும், அந்த வழியாக சென்ற ஒரே காரணத்திற்காக நில அளவை வரைவாளர் முத்துக்குமரனை ஒரு நாள் இரவு முழுவதும் போலீ்ஸ் ஸ்டேஷனில் வைத்து ஆற்றில் மனுவை போட்டதாக ஒத்துக்கொள்ளுமாறு கூறி அவரை கைது செய்துள்ளனர். அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும். இதில் தவறு செய்த அனைத்து வருவாய், போலீஸ் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வேண்டுகிறது. ஆற்றில் மனுக்கள் வீசப்பட்டது குறித்த விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்க வேண்டும். உள் நோக்கத்துடன் நில அளவை பிரிவு அலுவலர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட குற்றக்குறிப்பாணை நோட்டீசை கலெக்டர், நில அளவை துறை உதவி இயக்குனர் ரத்து செய்ய வேண்டும். நிர்வாகி தினேஷ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை