உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்:; இன்று நடக்கும் இடம்

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்:; இன்று நடக்கும் இடம்

சிவகங்கை; மாவட்ட அளவில் இன்று (ஜூலை 16) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.மாவட்ட அளவில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் செப்., வரை 215 முகாம்களாக நடக்க உள்ளது. அதன்படி இன்று (ஜூலை 16) காலை 10:00 மணிக்கு காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 4, 5 மற்றும் 16 பகுதி மக்களுக்கு கல்லுாரி ரோடு ராமநவமி மண்டபத்தில் நடக்கிறது.சிவகங்கை நகராட்சியில் வார்டு 1 முதல் 6 வரையிலான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஏ.எம்.கே., திருமண மண்டபத்தில் நடைபெறும். மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட வார்டு 9 மற்றும் 10 பகுதி மக்களுக்கு மானாமதுரை கோபால் இந்திரா மகாலிலும், திருப்புத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட 3 வது வார்டு மக்களுக்கு திருப்புத்துார் சன்மீனாள் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறும்.தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட பகுதிக்கென மேலசெம்பொன்மாரி சமுதாயக்கூடம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு தாயமங்கலம் சமுதாயக்கூடத்தில் முகாம் நடைபெறும். இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று அந்தந்த துறை சார்ந்த புகார்களை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை